×

மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை.. துப்பாக்கிச் சூட்டில் உள்ளூர் பாடலாசிரியர் உள்பட 6 பேர் உயிரிழப்பு!!

இம்பால் : மணிப்பூரில் சுராசந்த்பூர் – பிஷ்ணுப்பூர் மாவட்ட எல்லையில் இருதரப்புக்கும் இடையே வெடித்த வன்முறையில், 6 பேர் கொல்லப்பட்டனர். குக்கி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர் மாவட்டத்திற்கும் மெய்தி ஆதிக்கம் செலுத்தும் பிஷ்ணுப்பூர் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 3 நாட்களாக துப்பாக்கிச் சூடு நடைபெற்று வந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சமூக சீர்திருத்த பாடல்களை எழுதி வந்த உள்ளூர் பாடல் ஆசிரியர் எல்.எஸ்.மங்போய் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

இடைவிடாமல் 3 நாட்களாக நடைபெற்ற வன்முறையில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சுராசந்த்பூரில் தண்ணீர், மின்சாரம், மருத்துவ விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை உடனடியாக நிறுத்தி காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்திற்கு பழங்குடி கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளன. மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி – குக்கி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 60,000த்திற்கும் அதிகமானோர் பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர்.

The post மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை.. துப்பாக்கிச் சூட்டில் உள்ளூர் பாடலாசிரியர் உள்பட 6 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Surachandpur-Bishnupur district ,
× RELATED ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து...