×

தமுமுக துவக்க விழா

 

சாயல்குடி, செப்.1: முதுகுளத்தூரில் தமுமுக சார்பில் அக்கட்சியின் 29ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. மாவட்டத் தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சகாபுதீன், மாவட்ட அணி நிர்வாகிகள் சகுபர் சாதிக், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்நிகழ்வில் நகர அலுவலகத்தில் நகர செயலாளர் அப்துல் ரகுமான் தமுமுக கொடியை ஏற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் சி முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, எஸ்.ஐ சரவணன் 29 மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தனர். மேலும் முதுகுளத்தூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும், ஆதரவற்ற முதியோர் மற்றும் மாணவிகள் நல காப்பகத்திலும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மமக நகர செயலாளர் முகமது அலி, நகர பொருளாளர் முகைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தமுமுக துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Damumukha Inauguration Ceremony ,Sayalkudi ,DMUMK ,Mudukulathur ,District ,President ,Wawa ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை