×

கன மழையால் 300 ஆண்டு பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது வந்தவாசி ரங்கநாதர் பெருமாள் கோயிலில்

வந்தவாசி, செப்.1: வந்தவாசி ரங்கநாதர் பெருமாள் கோயிலில், காற்றுடன் பெய்த மழையால் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது. வந்தவாசி காந்தி சாலையில் ரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வந்தவாசியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் ரங்கநாதர் பெருமாள் கோயில் வளாகத்தில் இருந்த அரசமரம் அதிகாலை வேருடன் சாய்ந்தது. அப்போது கோயிலின் வளாகத்தில் உள்ள துணைகோயிலான ஐயப்பன் கோயில் மீது அரசமரம் விழுந்ததால் மேற்கூரை சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் எச்.ஜலால் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஊழியர்களைக் கொண்டு மரத்தை அகற்றும் பணியில் ஈடுபடுத்தினார். 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் காற்று மழையால் வேருடன் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கன மழையால் 300 ஆண்டு பழமையான அரசமரம் வேருடன் சாய்ந்தது வந்தவாசி ரங்கநாதர் பெருமாள் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Vandavasi Ranganatha Perumal temple ,Vandavasi ,Dinakaran ,
× RELATED ரூ.2 ஆயிரத்திற்காக கணவனை கொன்று...