×

இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி

புதுடெல்லி: இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023-24 ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதே காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக உள்ளது. பொருளாதாரத்தில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மாறி உள்ளது. விவசாயம், நிதித்துறைகளில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளன. நிதியியல், ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் சேவை பிரிவுகளில் கடந்த ஆண்டு 8.5 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 12.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி துறையில் கடந்த ஆண்டு 6.1 சதவீதமாக இருந்தது.தற்போது 4.7 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

The post இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,National Statistics Office ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...