×

சென்னை விஐடியில் பயிற்சி பெறும் மலேசிய மாணவர்களுடன் துணை தலைவர் சந்திப்பு

சென்னை: சென்னை விஐடியில் பயிற்சி பெற்றுவரும் மலேசியா மாணவர்களை, வி.ஐ.டி துணை தலைவர் சேகர் விசுவநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.விஐடி பல்கலைக்கழகம் நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சியுடன் கூடிய தரமான கல்வியை வழங்கி, உயர்கல்வி துறையில் தனி முத்திரையை பதித்து வருகிறது. இந்நிலையில், மலேசியாவின் பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த 11 மாணவர்கள், கடந்த ஆகஸ்ட் 27ம்தேதி சென்னை விஐடியில் பயிற்சி பெற வந்தனர். அந்த மலேசிய மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, சென்சார்கள், ஆக்சுவேட்டர்கள், மெகாட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட துறைகளின் கீழ், ஆகஸ்ட் 27ம்தேதி முதல் செப்டம்பர் 3ம்தேதி வரை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை விஐடியில் பயிற்சி பெற்று வரும் மலேசியா பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களை, சென்னை வி.ஐ.டி துணை தலைவர் சேகர் விசுவநாதன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ெசன்னை விஐடி பயிற்சியில் பங்கேற்ற மலேசியா மாணவர்கள், ‘இந்திய நாட்டின் தனித்துவமான கலாசாரம் மற்றும் நாடு கடந்து கல்வி பயிலும் அனுபவத்தால் மகிழ்ச்சி அடைகிறோம்.. சென்னை விஐடியின் இந்த முயற்சியை பாராட்டுகிறோம்’’ என்றனர்.

நிகழ்ச்சியை சென்னை விஐடி சர்வதேச உறவுகள் அலுவலக ஆதரவுடன், இயந்திர பொறியியல் துறை ஏற்பாடு செய்திருந்தது. பேராசிரியர்கள் ஆரோக்கிய செல்வகுமார், கருணாமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சந்திப்பின்போது, சென்னை வி.ஐ.டி இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், சென்னை வி.ஐ.டி இயந்திர பொறியியல் துறையின் டீன் அண்ணாமலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post சென்னை விஐடியில் பயிற்சி பெறும் மலேசிய மாணவர்களுடன் துணை தலைவர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Vice President ,VIT ,Chennai ,Shekhar Viswanathan ,VIT Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…