×

சினிமா ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறும்பட இயக்குனருக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை: சென்னை மதுரவாயலை சேர்ந்த சத்யபிரகாஷ் (37) என்ற குறும்பட இயக்குனர், சென்னையை சேர்ந்த பள்ளி சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பழகியுள்ளார். சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி, நடிப்பு பயிற்சி அளிப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுசம்பந்தமாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2021ல் சத்ய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம் தெளிவாக உள்ளது. எனவே, சத்ய பிரகாஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் 55 ஆயிரம் ரூபாயை சிறுமிக்கு வழங்க வேண்டும். உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post சினிமா ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறும்பட இயக்குனருக்கு 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Satya Prakash ,Maduravayal ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...