×

சைதாப்பேட்டை மயான பூமி 10 மாதங்களுக்கு செயல்படாது

சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139, சைதாப்பேட்டை மயானபூமியின் எரிவாயு தகன மேடை இடிக்கப்பட்டு புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று முதல் ஜூலை 31ம்தேதி வரை 10 மாதங்களுக்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது. எனவே, கட்டுமானப் பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள கண்ணம்மாபேட்டை அல்லது நெசப்பாக்கம் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சைதாப்பேட்டை மயான பூமி 10 மாதங்களுக்கு செயல்படாது appeared first on Dinakaran.

Tags : Saidapet Mayan Bhoomi ,Chennai ,Chennai Municipal Corporation ,Kodambakkam ,Mandal ,Ward- ,Saitappettai Mayanabhumi ,
× RELATED ஆசர்கானா சுரங்க நடைபாதையை வாகனங்கள்...