×

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 138 அப்ரன்டிஸ்கள்

1. Graduate Apprentice: 77 இடங்கள் Chemical-17, Civil-6, Electrical-10, Info/Technology Computer Science- 2, Instrumentation-8, Mechanical-26, Fire & Safety- 8. தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரவில் பி.இ., பட்டம்
2. Technician Apprentice: 51 இடங்கள். Chemical-12, Civil-8, Electrical-9, Instrumentation-10, Mechanical- 12. தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு.
3. Graduate Apprentice (Non-Engineering): 10 இடங்கள். பி.காம்-6, பிஎஸ்சி 4. தகுதி: பயிற்சி வழங்கப்படும் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு.
மேற்குறிப்பிட்ட அனைத்து பயிற்சிகளுக்கும் 2019ம் ஆண்டிற்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
வயது: 01.09.2023 தேதியின்படி 18 முதல் 27க்குள்.
டிப்ளமோ, பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பயிற்சியின் போது Graduate Apprentice பயிற்சிக்கு மாதம் ₹25 ஆயிரம், Technician மற்றும் Non-Engineering பயிற்சிக்கு ₹18 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
www.mhrdnats.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பதாரர் தங்களைப் பற்றிய விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Establishment Name List ஐ கிளிக் செய்து, அதிலிருந்து Bharat Petroleum நிறுவனத்தை தேர்வு செய்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.bharatpetroleum.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2023.

 

The post பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 138 அப்ரன்டிஸ்கள் appeared first on Dinakaran.

Tags : Bharat Petroleum Corporation ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...