×

சரக்கு விமான போக்குவரத்து துறையில் டிராலி ரெட்ரீவர்

சரக்கு விமான போக்குவரத்து நிறுவனத்தில் காலியாக உள்ள 105 டிராலி ரெட்ரீவர் (Trolley Retriever) பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Trolley Retriever: 105 இடங்கள். (பொது-44, ஒபிசி-28, எஸ்சி-15, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-11). வயது: 01.08.2023 தேதியின்படி 18 லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.21,300. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. உடற்தகுதி: உயரம்- 167 செ.மீ., எடை-55 கிலோ, மார்பளவு விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., சாதாரண நிலையில் 81 செ.மீ., இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ‘பெட்’ (PET) தேர்வு மூலம் தேரந்்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.aaiclas.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2023.

The post சரக்கு விமான போக்குவரத்து துறையில் டிராலி ரெட்ரீவர் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு