×

தென்னாப்பிரிக்காவில் 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 73 பேர் உயிரிழப்பு 43 பேர் படுகாயம்

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 73 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். மத்திய ஜோகன்னஸ்பர்க் உள்ள 5 மாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவு ஒன்றரை மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் தீவிரமாக பரவியது. 5 மாடி கட்டடமே தீ பிடித்து எரிந்ததால் ஜோகன்னஸ்பர்க் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பயங்கர தீ விபத்தில் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 73 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தென்னாப்பிரிக்க பேரிடர் மேலாண் படையினர் 43 பேரை தீ காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனிடையே கொழுந்துவிட்டு எறிந்த கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கட்டட இடிபாடுகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என ஜோகன்னஸ்பர்க் பேரிடர் மேலாண்மைபடை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

The post தென்னாப்பிரிக்காவில் 5 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 73 பேர் உயிரிழப்பு 43 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : south africa ,central Johannesburg ,Dinakaran ,
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...