×

கிண்டி வழித்தடத்தில் மெட்ரோ சேவை மீண்டும் தொடக்கம்.. பயணிகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துவதாக நிர்வாகம் அறிக்கை

சென்னை : கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, இரு வழித்தடங்களிலும் வழக்கம்போல் ரயில் சேவை இயக்கப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,”கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் மேல்நிலை உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீலவழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி-டி.எம்.எஸ்., நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக சின்னமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.

பச்சை வழித்தடத்தில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு வழியாக பரங்கிமலை மெட்ரோ செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வந்தது. கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் மேல்நிலை உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரை தொழில் நுட்ப வல்லுனர்கள் சரிசெய்யதனர். தற்போது, மெட்ரோ இரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.மெட்ரோ இரயில் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத திடீர் தடங்கல்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது,”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிண்டி வழித்தடத்தில் மெட்ரோ சேவை மீண்டும் தொடக்கம்.. பயணிகளுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துவதாக நிர்வாகம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Guindy ,Chennai ,Guindi metro station ,Guindi ,Dinakaran ,
× RELATED கிண்டி, மீனம்பாக்கத்தில் கோடை வெயில் உக்கிரத்தில் 2 இடங்களில் தீ விபத்து