×

கேரளாவில் சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!: கொண்டாடிய சேட்டன்கள்… ரூ.665 கோடிக்கு கல்லா கட்டிய மது விற்பனை..!!

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையின் முதல் 9 நாட்களில் கேரள மாநிலத்தில் ரூ.665 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது. ஓணம் பண்டிகை கேரளாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஜாதி, மதம் என பார்க்காமல் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் இந்த பண்டிகையால் மாநிலம் முழுவதும் விழா கோலாகலமாக காணப்பட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகை மட்டுமில்லாது சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகை நாட்களில் மது விற்பனை மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே இருக்கும்.

தற்போது ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் மூலம் 300-க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகளில் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கடந்த 20ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை கொண்டாடப்பட்டது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. கேரளாவில் 320க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளுக்கும் 500க்கும் மேற்பட்ட பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் மாநிலம் முழுவதும் ரூ.665 கோடி மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.624 கோடி மது விற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.41 கோடி அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஓணம் பண்டிகையில் ரூ.770 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக பெவ்கோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை காலத்தில் ரூ.700.6 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 3 கோடியே 30 லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த 30 லட்சம் பேரில் 27 லட்சம் ஆண்களும், 3 லட்சம் பெண்களும் தினமும் மது அருந்துவதாக சொல்லப்படுகிறது. அதிலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இம்மாநிலத்தில் தான் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

The post கேரளாவில் சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!: கொண்டாடிய சேட்டன்கள்… ரூ.665 கோடிக்கு கல்லா கட்டிய மது விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,festival ,Onam ,Oonam Festive ,Excellent Ended Oanam Festival ,Chetons ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...