×

குற்றவாளிகளை விரைந்து பிடித்த 34 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் ஈரோடு எஸ்பி ஜவகர் வழங்கினார்

ஈரோடு, ஆக. 31: ஈரோடு மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போக்சோ வழக்கில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. இதில், ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியில் அரசு பள்ளி ஆசிரியை புவனேஸ்வரியை கொலை செய்த கார் டிரைவரான ஜெயக்குமார் என்பவரை கைது செய்ய தனிப்படை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஈரோடு தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் வேட்டை ரவி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜா பிரபு, சத்தியமங்கலத்தில் குற்ற வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் முருகேசன், சைபர் செல் எஸ்ஐ செல்வி, மலையம்பாளையம் எஸ்எஸ்ஐ ராதாகிருஷ்ணன், பெருந்துறை எஸ்ஐ பாஸ்கரன், பவானி எஸ்ஐ மகேஸ்வரி, எஸ்எஸ்ஐ குமரேசன், போக்சோ வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் தலைமைக்காவலர்கள் சாந்தி, ரேவதி உட்பட 34 போலீசாரின் பணிகளை பாராட்டி, எஸ்பி ஜவகர் சான்றிதழ் வழங்கி, தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிட அறிவுறுத்தினார்.

The post குற்றவாளிகளை விரைந்து பிடித்த 34 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் ஈரோடு எஸ்பி ஜவகர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Erode SP Jawahar ,Erode ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது