×

குப்பையில் கிடக்கும் குப்பை வண்டிகள்

சாத்தூர், ஆக.31: சத்திரப்பட்டி ஊராட்சியில் குப்பை தொட்டிகள் குப்பையில் கிடப்பதால் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சாத்தூர் அருகே சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு குப்பை வண்டிகள் வழங்கப்பட்டது. அரசு வழங்கிய குப்பை வண்டிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் குப்பையோடு குப்பையாக கிடக்கிறது.

இதனால் ஊராட்சி பகுதி குடியிருப்புகளில் சேறும் குப்பையை அகற்றாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பழுதடைந்த குப்பை வண்டிகளை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post குப்பையில் கிடக்கும் குப்பை வண்டிகள் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Chatrapatti ,Chhatrapatti Panchayat ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?