×

நீட் தேர்வில் வெற்றி: மாணவருக்கு பாராட்டு

கோபால்பட்டி, ஆக. 31: சாணார்பட்டி அருகே கம்பளியம்பட்டி ஊராட்சி ஆண்டியபட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் பிரவீன். இவர் திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று, நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இவருக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஆண்டியப்பட்டிக்கு வந்த பிரவீனை ஊராட்சி தலைவர் விஜயா, திமுக ஒன்றிய துணை செயலாளர் வீராச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் அமிர்தவர்ஷினி ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, பரிசுகளை வழங்கினர்.

The post நீட் தேர்வில் வெற்றி: மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Gopalpatti ,Praveen ,Sathyamurthy ,Andiyapatti ,Kampaliambatti ,Chanarpatti ,Tirupur ,
× RELATED தட்பவெப்ப மாறுதலால் உடல்நிலை மோசம்...