×

₹70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

மல்லசமுத்திரம், ஆக.31: மல்லசமுத்திரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று விவசாயிகள் கொண்டு வந்த 2,600 மூட்டை பருத்தி ₹70 லட்சத்துக்கு விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,600 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த பருத்தியை கொள்முதல் செய்ய கோவை, அவிநாசி, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹7,610 முதல் ₹8,372 வரையும், பி.டி.ரகம் பருத்தி குவிண்டால் ₹6,670 முதல் ₹7,580 வரையும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,890 முதல் ₹5,890 வரையிலும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 2,600 மூட்டை பருத்தி ₹70 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹70 லட்சத்துக்கு பருத்தி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mallasamutram Agricultural Producers Cooperative Sales Association ,Dinakaran ,
× RELATED அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு