×

டேங்கர் லாரி வெடித்து சிதறி தொழிலாளி பலி

மதுக்கரை: கோவை மலுமிச்சம்பட்டி அடுத்துள்ள போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி ஒர்க்‌ஷாப் உள்ளது. இங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் (38), ரவி (20) உட்பட பலர் வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பழைய பர்னஸ் ஆயில் டேங்கர் லாரியை வாங்கி அதனை தண்ணீர் லாரியாக மாற்றித்தருமாறு கேட்டிருந்தார். அதன்படி நேற்று காலை பர்னஸ் ஆயில் டேங்கர் லாரியின் மேல் மூடியை திறப்பதற்காக வக்கீல் மற்றும் ரவி வெல்டிங் வைத்தனர். அப்போது தீப்பொறி சிதறி டேங்கரில் இருந்த வேதிப்பொருட்களுடன் கலந்ததால் தீ பிடித்து வெடித்து சிதறியது. இதில் வக்கீல் சம்பவ இடத்திலேயே பலியானார். ரவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post டேங்கர் லாரி வெடித்து சிதறி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Shanmugam ,Bodhipalayam Road ,Malumichambatti, Coimbatore ,Uttar Pradesh ,
× RELATED மதுக்கரை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற பீடா கடை அதிபர் கைது