×

திடீர் உடல்நல குறைவால் மாஜி முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் கோலார் மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது. மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை பலப்படுத்துவதற்காக நாளை முதல் அக்கட்சி தலைவர்கள் மாநில சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று கோலார் மற்றும் சிக்கபள்ளாபுரா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி தொண்டர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குமாரசாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், இரு மாவட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் குமாரசாமியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளதாகவும் அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் இரு நாட்கள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று டாக்டர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திடீர் உடல்நல குறைவால் மாஜி முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,Kumaraswamy ,Bengaluru ,Karnataka ,Kolar district ,Dinakaran ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...