×

தொழுகை செய்ய அனுமதி: டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் கண்டக்டர் தற்கொலை

மெயின்புரி: உத்தரபிரசேதம் குஷால் கிராமத்தை சேர்ந்த மோகித் யாதவ்(30) என்பவர் உத்தரபிரதேச போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி நள்ளிரவு பரேலியில் இருந்து ராம்பூர் மாவட்டம் மிலாக் பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பயணிகள் இயற்கை உபாதை கழிக்க பேருந்தை நிறுத்தி உள்ளனர். அதில் இரண்டு பயணிகள் தொழுகை நடத்த விரும்பியதால் கூடுதலாக சிறிது நேரம் பேருந்து நிறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து பேருந்து நடத்துநர் மோகித் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஓட்டுநர் 50 சதவீத சம்பள பிடித்தத்துடன் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டார். இதனால் மோகித் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை மோகித்தின் உடல் கோஸ்மா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேலையை இழந்த மோகித் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post தொழுகை செய்ய அனுமதி: டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் கண்டக்டர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mainpuri ,Mohit Yadav ,Kushal ,Uttarprasedam ,Uttar Pradesh Transport Corporation ,
× RELATED அகிலேஷ் மனைவிக்கு ரூ.15 கோடி சொத்து