×

15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி ஒரே நாளில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பத்திரப் பதிவுத்துறையில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஒரே நாளில் 15 புதிய கட்டடங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார். பத்திரப் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் சொந்த கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என தமிழக முதல்வர் உத்திரவிட்டிருந்தார்கள். அதற்கிணங்க நடப்பாண்டில் ஏற்கெனவே 44 புதிய அரசு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி அரசாணைகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.27.48 கோடி மதிப்பில் மேலும் 15 புதிய அரசு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி ஒரே நாளில் அதாவது 17.08.2023 அன்று அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி மொத்தம் 15 புதிய கட்டடங்களில் தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அப்பகுதியிலேயே உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய சொந்த கட்டடமும் நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான கட்டடங்களில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகங்களான கள்ளிக்குடி, திருமங்கலம், வலங்கைமான், திருப்போரூர், பென்னாகரம், உப்பிலியாபுரம், நெல்லிக்குப்பம், விராலிமலை, முசிறி, காட்டுப்புத்தூர், அவினாசி, குன்னத்தூர் மற்றும் கயத்தாறு ஆகிய 14 சார்பதிவாளர் அலுவலங்களின் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு அதே இடத்தில் உரிய அடிப்படை வசதிகளுடன் நவீன முறையில் புதிய வடிவமைப்புடன் கூடிய சொந்த கட்டடங்களும் கட்டப்பட உள்ளன.

The post 15 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கி ஒரே நாளில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Government of Tamil Nadu ,Chennai ,Department of Commerce and Registry ,Tamil Nadu Government ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...