×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் சபலென்கா, அல்கராஸ் 2வது சுற்றுக்கு தகுதி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யு.எஸ் ஓபன் டென்னிஸ்தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளான இன்று அதிகாலை மகளிர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, பெல்ஜியத்தின் மரினா ஜானெவ்ஸ்காவுடன் மோதினார். இதில் 6-3,6-2 என சபலென்கா வென்று 2வதுசுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் சோபியா கெனின் 7-6,6-4 என ருமேனியாவின் அனா போக்டனை வென்றார். இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டி 6-4,7-6 என 12ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பார்போரா கிரெஜிகோவாவை வென்றார். செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, எஸ்டோனியாவின் கையா கனேபி, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, மேடிசன்கீஸ், குரோஷியா பெட்ரா மார்டிக் ஆகியோரும் முதல் சுற்றில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தனர். 7ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செக்குடியரசின் டோனா வெக்கிச் ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர். ஆடவர் ஒற்றையரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர், சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா உள்ளிட்டோர் முதல் சுற்றில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் சபலென்கா, அல்கராஸ் 2வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : US Open Tennis Sabalenca ,Alcaras ,New York ,U. The S Open ,Tennessee ,Algaras ,Dinakaran ,
× RELATED நியூயார்க் மாகாணத்தில் தீபாவளிக்கு...