×

தஞ்சை பசுபதி கோயில் கிராமத்தில் மழையின் போது, மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!!

சென்னை : தஞ்சாவூர் பசுபதி கோயில் கிராமத்தில் மழையின் போது, மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி சுஷ்மிதாசென்னின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்- 1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம் உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த செல்வி சுஷ்மிதாசென். தபெசெந்தில்குமார் (வயது-15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த செல்வி இராஜேஸ்வரி த/பெ.கந்தன் (வயது-15) ஆகிய இருவர் மீதும் நேற்று (29-8-2023) மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்து விழுந்ததில் செல்வி சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.மாணவி செல்வி சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி இராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியதவி வழங்கவும் உத்திரவிட்டுள்ளேன்,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சை பசுபதி கோயில் கிராமத்தில் மழையின் போது, மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த மாணவி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!! appeared first on Dinakaran.

Tags : Thanjai Pashupati Temple ,Chennai ,Thanjavur Pashupati temple ,Sushmitasen ,Sushmidasen ,Thanjai Pashupati Temple Village ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...