×

ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

 

சிவகங்கை, ஆக.30: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை தேர்தல் நடைபெற்றது. ஆணையாளராக ஜான்அந்தோணி, துணை ஆணையாளராக காளிராஜா செயல்பட்டனர். வட்டார தலைவராக இந்திராகாந்தி, செயலாளராக கணேசன், பொருளாளராக பிரபாகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக பஞ்சுராஜ், சுரேஷ், ஜான்தாமஸ், சத்யராஜ், தமிழ்செல்வம், துணைத் தலைவர்களாக வேணுகோபால், திருமுருகன் மற்றும் மீனாட்சி துணைச் செயலாளர்களாக அசோக்பாரதி, சூசைமாணிக்கம், சாந்தா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப்ரோஸ், குமரேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவை இல்லை என்ற கொள்கை முடிவெடுத்து பதவி உயர்வு வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Teachers Alliance ,Sivagangai ,Tamil Nadu Primary School Teachers Alliance ,John Anthony ,Teacher Alliance ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்க குழுவினர் உண்ணாவிரதம்