×

நடிகை விஜயலட்சுமி விவகாரம் ரொம்ப கேவலமாக இருக்கிறது: சீமான் பேட்டி

ஈரோடு: நடிகை விஜயலட்சுமி குறித்து கேட்ட கேள்விக்கு ரொம்ப கேவலமாக இருக்கிறது என்று சீமான் பதிலளித்துள்ளார். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோட்டுக்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சிஏஜி அறிவித்த பட்டியலில், ஊழல் என்பதை அண்ணாமலை ஒத்துக்கொள்ள மறுக்கிறார். இந்தியா பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. வளரும் நாடுகள் பட்டியலிலேயே இந்தியா கிடையாது. 2 கோடி பேருக்கு கடந்த 10 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை. மக்களை நேரடியாக பிரதமர் சந்திக்காமல் கண்ணாடி அறைக்குள் இருந்து வானொலி மூலமாக பேசிவிட்டு செல்கிறார்.

இந்தியாவில் தரமான டாக்டர்களை உருவாக்குவதற்காக நீட் தேர்வு நடத்த அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு எதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டது? இதுவரை உள்ள கல்வி முறையில் தரமான டாக்டர்கள் இல்லையா? பிரதமருக்கு நாளை உடல்நிலை சரியில்லை என்றால் நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற டாக்டரிடம் மட்டும் தான் சிகிச்சை பெறுவாரா? எனவே நீட் தேர்வால் எந்த தகுதியும் அதிகரித்து விடாது. நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சாதனை படைக்குமா என்று கேட்டால், சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்து சீமானிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘இதுவரை கேள்விகளை கேட்டீர்கள். தற்போது கேவலத்தை கேட்கிறீர்கள். அவரது புகாரில் அரசியல் பின்னணி இருக்கலாம். என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதை அமைதியாக கடந்து போக நினைக்கிறேன். உலகம் முழுவதும் என்னை நேசிக்கும் மக்கள் என எனக்கு பல கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. எனக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். எனக்கு குடும்பம், சொந்தங்கள் இருக்கின்றன. திரும்ப, திரும்ப பேசுவது ரொம்ப கேவலமாக இருக்கிறது. என்னை சார்ந்தவர்களின் மனநிலை என்னவாக இருக்கும். நான் எவ்வளவோ வலிகளை தாங்கி கடந்து வந்தவன்’’ என்று கூறினார்.

The post நடிகை விஜயலட்சுமி விவகாரம் ரொம்ப கேவலமாக இருக்கிறது: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : vijayalakshmi ,Erode ,Seeman ,Erode Villarasambatti ,
× RELATED போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை...