×

முன்னாள் திமுக நிர்வாகி கன்னிமுத்து நினைவு தினம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருக்கழுக்குன்றம்: முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் கன்னிமுத்துவின் 20ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருக்கழுக்குன்றம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய திமுக செயலாளருமான மறைந்த இர.கன்னிமுத்துவின் 20ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள சுப்பையா சுவாமிகள் மடத்தில், கன்னிமுத்துவின் மகனும் திமுக மாவட்ட பிரதிநிதியும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான ஆர்.கே.ரமேஷ் ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி – சேலை, அறுசுவை உணவு வழங்கினார்.

The post முன்னாள் திமுக நிர்வாகி கன்னிமுத்து நினைவு தினம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kannimuthu ,Memorial Day ,Thirukkalukunram ,Thirukkalukkunram ,
× RELATED கோபி நகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்