×

ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார்

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லாத மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் காவேரி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான
துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு 172 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் துரை.சந்திரசேகர் எம்எல்ஏ பேசுகையில், ‘’தற்போது தமிழகத்தில் பெண்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது.

உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண்கள் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், மருத்துவக் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவியருக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு, 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு சாதனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.விழாவில், ஆரணி பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் சுகுமார், ஆரணி திமுக நகர செயலாளர் முத்து, மாவட்ட பிரதிநிதி கரிகாலன், கவுன்சிலர்கள் கண்ணதாசன், ரஹ்மான்கான், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தேவராஜன் நன்றி கூறினார்.

The post ஆரணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Arani ,MLA ,Periyapalayam ,Tamil Nadu Government ,Arani Government Women's Higher School ,Thiruvallur District ,Arani Government High School ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை