- ராகுல் காந்தி
- ஐரோப்பா
- இந்தியா கூட்டணி
- ஜி-20 உச்சிமாநாடு
- புது தில்லி
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஜி -20
- இந்தியா
- தின மலர்
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, 5 நாட்கள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. வரும் செப்டம்பர் 9, 10ம் தேதியில் டெல்லியில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடக்கிறது. அதற்கு முன்னதாக நாளை மறுநாள் (ஆக. 31) மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு மும்பையில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார். குறிப்பாக பெல்ஜியம் செல்லும் அவர், ஐரோப்பிய ஆணைய எம்பிக்களை சந்திக்கிறார். தொடர்ந்து பிரான்சின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாற்றுகிறார். பின்னர் ஒஸ்லோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தி, அங்குள்ள இந்தியர்களிடையே உரையாற்றுகிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘5 நாள் சுற்றுப்பயணமாக வரும் செப்டம்பர் முதல் வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு ராகுல்காந்தி செல்கிறார். பெல்ஜியம், பாரிஸ் செல்ல வாய்ப்புள்ளது. செப்டம்பர் 7ம் தேதி பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 8ம் தேதி பாரிஸ் நகரில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்றுகிறார். செப்டம்பர் 9ம் தேதி பாரிஸில் நடைபெறும் பிரான்ஸ் தொழிலாளர் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்கிறார். செப்டம்பர் 10ம் தேதி இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்றுகிறார். அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் செய்தியாளர்களையும் சந்திப்பார். அதன்பின் நாடு திரும்புவார்’ என்று அவர்கள் கூறினர்.
The post இந்தியா கூட்டணி கூட்டம், ஜி-20 மாநாட்டுக்கு மத்தியில் ராகுல் காந்தி ஐரோப்பியா பயணம்: மாணவர்கள், இந்திய வம்சாவளியினரை சந்திக்கிறார் appeared first on Dinakaran.
