×

அதானி குழுமம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது செபி அமைத்த குழுவின் விசாரணையில் அம்பலம்

டெல்லி : அதானி குழுமம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது செபி அமைத்த குழுவின் விசாரணையில் அம்பலமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பரபரப்பான இந்த சூழலில் அதானி குழுமம் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மோடியின் நண்பர் என்று காங்கிரசால் கூறப்படும் கவுதம் அதானி, தன்னுடைய நிறுவனங்களில் சந்தை மதிப்பை போலியான நிறுவனங்களை பல மடங்கு உயர்த்தி கொண்டார் என்பது குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிதி ஆய்வு நிறுவனம், கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை நாடு முழுவதும் புயலை கிளப்பியது. இந்த குற்றச்சாட்டால் இந்திய பங்குச்சந்தை மிக சரிவை சந்தித்தது. எனவே ஹிண்டன்பர்க் முன்வைத்த புகார் பற்றி விசாரிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியை உச்சநீதிமன்றம் பணித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, ஏற்கனவே மே மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த நிலையில், தங்கள் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக கடந்த வெள்ளியன்று இந்த குழு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் அதானி நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வரையறைகள் தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் விதிமீறல்களில் ஈடுபட்டது உறுதியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேரடி முதலீட்டில் ஒரு வெளிநாட்டினர் 10% மட்டுமே இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும் என்ற விதி இருக்கும் நிலையில், அதை அதானி குழுமம் மீறி இருப்பது செபியின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post அதானி குழுமம் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு இருப்பது செபி அமைத்த குழுவின் விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Sepi ,Delhi ,SEBI ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...