×

தேசிய பறவையை பாதுகாக்க வேண்டும்: கலெக்டரிடம் கவுன்சிலர் வலியுறுத்தல்

 

கோவை, ஆக.29: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு எப்.சி.ஐ குடோன், ஸ்ரீராம்நகர், முருகன் நகர், பீளமேடு விஜய்ஸ்ரீ கார்டன், கிருஷ்ணம்மாள் கல்லூரி அருகில் பயனீர் மில் ரோடு பின்புறம் போன்ற பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் அதிகளவில் உள்ளன. இவை, சில நேரங்களில் நோய் வாய்ப்பட்டு விழுந்து கிடக்கிறது. சில நேரம் இறந்து விடுகிறது. இதற்கான காரணம் என்ன? என தெரியவில்லை. இதுகுறித்து யாரிடம் புகார் தெரிவிப்பது எனவும் தெரியவில்லை.

வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, தேசிய பறவையான மயில்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுசம்பந்தமாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக, உரிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட வேண்டும். இவ்வாறு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி கூறியுள்ளார்.

The post தேசிய பறவையை பாதுகாக்க வேண்டும்: கலெக்டரிடம் கவுன்சிலர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ward ,Councilor ,Chitra Vellingiri ,Coimbatore District ,Collector ,Krantikumar Badi ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...