×

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் பெண்கள் கபடி போட்டி

 

ஜெயங்கொண்டம், ஆக,29: ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் 200 மாணவிகள் பங்கேற்றனர். ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது. போட்டியினை த.கீழவெளி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் குறுவட்ட இணை செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் துரைராஜ் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தார். நடுவர்களாக சேகர், குமார் ,மோகன், கரிகாலன், முத்து, பாஸ்கர் , ஷாயின்ஷா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றினர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த சுமார் 200 மாணவிகள் கலந்து கொண்டனர்.நடைபெற்ற கபடி போட்டிகளில்14 வயது பிரிவில் மேலணிக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும் , வடவீக்கம் ஆர்சி பாத்திமா பள்ளி இரண்டாம் இடமும்,17 வயது பிரிவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளி முதலிடமும்,மீன்சுருட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பெற்றன.19 வயது பிரிவில் மீன்சுருட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மேலணிகுழி அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும் பெற்றனர்..முதல் இடத்தில் வெற்றி பெற்ற அனைவரும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் பெண்கள் கபடி போட்டி appeared first on Dinakaran.

Tags : Jeyangondam Women's Kabaddi Tournament ,Jayangondam ,Jayangkondam ,Jayangkondam CD Level Women's Kabaddi Tournament ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...