×

தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ வேண்டுகோள்

ராஜபாளையம், ஆக.29: தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என தங்கப்பாண்டியன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்தார்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, இப்பள்ளியில் பயின்ற மகாலிங்கம் என்ற மாணவர், நீட் தேர்வில் வெற்றிபெற்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது எனவும் புத்தகம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்காக உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியனிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து நேற்று பள்ளியில் நடந்த சைக்கிள் வழங்கும் விழாவில், மாணவர் மகாலிங்கத்திற்கு தனது ஒரு மாத ஊதிய ஊதியமான ரூ.1,05,000ஐ தங்கப்பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்.

பின்னர் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, இப்பள்ளியில் தற்போது மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆகவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி அடுத்த ஆண்டில் 200 புதிய மாணவ, மாணவியர்களை பள்ளியில் சேர்க்க சபதம் எடுத்து பணியை மேற்கொள்வோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ்வரி, சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் சந்திரகலா, துணை சேர்மன் காளீஸ்வரிமாரிச்செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் மாணவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Dangapantian MLA ,Rajapalayam ,A.29 ,Thangapandiyan ,MLA ,Bangalapantian MLA ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்