×

பைக் மோதி விபத்து

தேவதானப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பூலத்தூர் ஜேபி,நகரைச் சேர்ந்தவர் மாயவன்(56). இவர் நேற்று முன்தினம் வத்தலக்குண்டுவில் இருந்து பூலத்தூர் செல்வதற்காக பஸ்சில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது தேவதானப்பட்டி காட்ரோடு கெங்குவார்பட்டி அருகே புஷ்பராணிநகரில் இறங்கி, சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது கொடைக்கானலில் இருந்து காட்ரோடு நோக்கி வந்த டூவிலர் மாயவன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மாயவன் மற்றும் டூவிலரில் வந்த தேனியைச் சேர்ந்த பிரவீன்காந்த்(22) ஆகிய இருவரும் காயமடைந்தனர். இது குறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் பிரவீன்காந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Mayavan ,Boolathur JP ,Kodaikanal, Dindigul district ,Vatthalakundu ,Poolathur ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி பகுதியில் தென்னை...