×

விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் திட்டப்பயிற்சி முகாம்

பேரையூர்: பேரையூர் தாலுகா, சேடபட்டி வட்டார விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மைத் திட்டப் பயிற்சி மங்கல்ரேவு சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் (பொ) சுப்புராஜ், வேளாண்மைத் துணை இயக்குனர் மத்தியத் திட்டம் அமுதன், ஆகியோர் தலைமையில், சேடபட்டி வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி, திருவண்ணாமலை இயற்கை விவசாய முன்னோடி பாஸ்கரன், ஆகியோர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பஞ்சகவ்யம் தயாரித்தல், ஜந்திலைக்கரைசல் தயாரித்தல், மற்றும் பூச்சி விரட்டில்கள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆரோக்கியா டிரஸ்ட் முத்துராமன் இயற்கை விவசாயம், இயற்கை பண்ணையம் ஊக்குவிப்பதற்கு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவே விவசாயிகளுக்கு முன்னேற்றம் வழங்குவதாக இருக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.

The post விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண் திட்டப்பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Program Training ,Beraiyur ,Sedapatti ,Mangalrevu Community Hall ,Dinakaran ,
× RELATED பேரையூரில் திமுக மாணவரணி டூவீலர் பேரணி; துண்டு பிரசுரங்கள் வழங்கினர்