×

சிறைக்காவலர் பணிக்கு பொதுத்தேர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கு பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இப்பொதுத் தேர்வில் கலந்துகொண்டு வேலைவாய்பினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post சிறைக்காவலர் பணிக்கு பொதுத்தேர்வு appeared first on Dinakaran.

Tags : Jailer ,Chengalpattu ,Collector ,Rahul Nath ,Tamil Nadu Uniformed Services Commission ,Dinakaran ,
× RELATED சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்...