×

சக மாணவர்களால் தாக்கப்பட்ட உபி பள்ளி மாணவன் வேறு பள்ளிக்கு மாற்றம்

முசாபர்நகர்: ஆசிரியை உத்தரவால் சக மாணவர்களால் தாக்கப்பட்ட உபி பள்ளி மாணவன், வேறு பள்ளிக்கு மாறிச்சென்றான். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரின் குப்பாபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை திரிப்தா தியாகி என்பவர் வீட்டு பாடம் எழுததால் 2ம் வகுப்பு மாணவனை திட்டியபடி சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைய செய்தார். அதோடு, மாணவனின் மதத்தை பற்றி வெறுப்பு கருத்துக்களை கூறுகிறார். அதோடு, குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து, அந்த மாணவனை ஆசிரியை அறைய வைக்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஆசிரியைக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாணவனின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் சக மாணவர்களால் அறையப்பட்ட பள்ளிச் சிறுவன் குப்பாபூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் இருந்து விலகி விட்டான். அங்கிருந்து இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஷாப்பூர் நகரில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளான். பள்ளி சிறுவனின் கல்விக்கு நிதியுதவி அளித்து, புதிய பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் வருவதற்கும் ஒரு வாகனத்தையும் அங்குள்ள அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. புதிய பள்ளியில் சிறுவனின் சேர்க்கை நடைமுறை நேற்று முடிவடைந்தது.

இதற்கிடையே பள்ளி சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட குப்பாபூர் கிராம பள்ளி நேற்று மூன்றாவது நாளாக பள்ளி மூடப்பட்டது. கல்வித் துறையால் வழங்கப்பட்ட நோட்டீசுக்கு இன்னும் பதில் அளிக்காததால் பள்ளி இன்னும் திறக்கவில்லை என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் அங்கீகாரம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அங்கு வழக்கமான கற்பித்தல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஷீபம் சுக்லா கூறினார்.

The post சக மாணவர்களால் தாக்கப்பட்ட உபி பள்ளி மாணவன் வேறு பள்ளிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : UP ,Muzaffarnagar ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...