×

மலையக சபைகளுக்கு கூடுதல் சுயாட்சி; மணிப்பூர் இனக்கலவரத்திற்கு அரசியல் தீர்வு?.. முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தகவல்

இம்பால்: மணிப்பூர் இனக்கலவரத்திற்கு அரசியல் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் மெய்டீஸ் – குகி இன மக்களிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் கடந்த மூன்று மாதமாக 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இன்னும் நிலைமை சீராகாத நிலையில், நேற்றும் கூட 3 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இரு குழுக்களுக்கு இடையே எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக பாஜக எம்எல்ஏவும், மலைப் பகுதி கமிட்டியின் (எச்ஏசி) தலைவருமான டிங்காங்லுன் கங்னாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது.

அந்த குழுவில் மூன்று நாகாக்கள் மற்றும் இரண்டு பனகல் (மெய்டீஸ் முஸ்லிம்கள்) இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இரு இனத்தை மக்களிடையே பல்வேறு கட்டங்களாக தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து மாநில முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘மணிப்பூரில் நிலவும் இனக்கலவரத்திற்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, தற்போதுள்ள மலையக சபைகளுக்கு கூடுதல் சுயாட்சி வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிப்பூரின் ஒருமைப்பாட்டுக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இருதரப்பும் ஏற்கும்பட்சத்தில் இன மோதல் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையைப் பார்க்கும்போது, மாநில அரசின் அரசியல் தீர்வுகளுக்கு ​​குகி மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை’ என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 

The post மலையக சபைகளுக்கு கூடுதல் சுயாட்சி; மணிப்பூர் இனக்கலவரத்திற்கு அரசியல் தீர்வு?.. முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Malayalam ,Swaram ,Principal Office ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் முதல்வர் வீடு அருகே பயங்கர தீ விபத்து