×

பிரெட் டிச்சா

தேவையானவை:

கோதுமை பிரெட் – 6,
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்,
ஊறவைத்த காராமணி – ¼ கப்,
பீட்ஸா சாஸ்,
மிளகுத்தூள் – தலா 1 ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயத்தாள்,
துருவிய குடைமிளகாய் – தலா 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு, நெய், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயத்தாள், குடைமிளகாய், வெந்த காராமணி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி தக்காளி சாஸ், பீட்ஸா சாஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் கலவையை 2 பிரெட் துண்டுகளுக்கு நடுவே வைத்து நெய் தடவிய சூடான தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்யவும்.

The post பிரெட் டிச்சா appeared first on Dinakaran.

Tags : Fred Dicha ,
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு