×

உலக தடகள போட்டியில் கவனம் பெற்ற தமிழ்நாடு வீரர்: தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணியில் இடம்பெற்ற ராஜேஷ்

திருச்சி: உலக தடைகள சாம்பியன்ஷிப் தொடரின் தொடர் ஓட்டப்பந்தயத்தில் அசத்திய இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஷ் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். டிக்கெட் பரிசோதகராக இருந்து சர்வதேச களத்தில் ஜொலித்த வீரரை பலரும் பாராட்டி வருகின்றனர். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்து விளையாட்டில் ஜாம்பவான் ஆனார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் எம்.எஸ். தோனி அவரைப் போலவே டிக்கெட் பரிசோதகராக இருந்து தடகளத்தில் அசத்திய தமிழ்நாட்டு வீரரை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

ஹங்கேரியில் நடந்த ஆசிய தடகள போட்டியின் தொடர் ஓட்ட இறுதி சுற்றில் இந்திய அணி 5வது இடம் பிடித்துள்ளது. பதக்கத்தை இழந்திருந்தாலும் 4 வீரர்கள் கொண்ட இந்திய அணியினர் தகுதி சுற்றில் அசத்தி ஆசிய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளனர். இந்தியாவின் முகமது அனஸ், அமோஷ் ஜேக்கப், முகமது அஸ்வந்த், ராஜேஷ் ரமேஷ் இந்த போட்டியில் பங்கேற்றனர். இறுதி சுற்றுக்கு முந்தைய தகுதி சுற்றில் இவர்கள் 2வது இடத்தை பிடித்தனர். இதில் ஆங்க்ரலிக் எனப்படும் கடைசி கட்டத்தில் ஓடி வெற்றி இலக்கை தொடும் இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் ஓடினார்.

இவர் சிறுவயதிலிருந்து ஓட்ட பந்தயத்தில் ஆர்வம் மிக்கவராக இருந்து வந்துள்ளார். மாநில,தேசிய அளவில் பல பதக்கங்களை வென்றுள்ள ராஜேஷ் தற்போது சர்வதேச களத்திலும் அசத்தி இருக்கிறார். பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அவர் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் விளையாட்டிலிருந்து ஒதுங்கி ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இணைந்தார். தற்போது திருச்சியில் அவர் பணியாற்றி வருகிறார். அரசு பள்ளியில் பயின்ற ராஜேஷ் அங்கிருந்த பி.டி ஆசிரியர்கள் அளித்த பயிற்சி மற்றும் ஊக்கத்தினாலேயே இந்த இடத்தை அடைந்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். தோனியை போல ராஜேஷ்-ம் சாதனைகளை படைப்பர் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

The post உலக தடகள போட்டியில் கவனம் பெற்ற தமிழ்நாடு வீரர்: தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணியில் இடம்பெற்ற ராஜேஷ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,World Athletics ,Rajesh ,Indian ,Trichy ,World Steeplechase Championship series ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...