×

‘அல்வா’-வில் விஷம் கலந்து கொடுத்து மனைவி, மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மகள் அட்மிட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் பிரதாப் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் சர்மா (30) என்பவர், தனது மனைவி சாக்‌ஷி (28), 2 வயது மகள், 5 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். கடன் சுமையால் தவித்து வந்த மனோஜ் சர்மா, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்காக ‘அல்வா’வில் விஷப் பொருளைக் கலந்து, தனது மனைவி, மகன், மகளுக்கு கொடுக்க திட்டமிட்டார். அதன்படி அல்வாவை வாங்கி வந்து, தனது மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்தார். அந்த அல்வாவை மனைவி, 2 குழந்தைகளும் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் மூன்று பேரும் மயக்கமடைந்தனர்.

வாயில் நுரை வெளியேற சர்மாவின் மனைவி சாக்‌ஷி, 5 மாத மகன் ஆகியோர் இறந்தனர். ஆபத்தான நிலையில் அவரது மகள் உயிருக்கு போராடிக் ெகாண்டிருந்தார். அதையறிந்த அக்கம்பக்கத்தினர் சர்மாவின் மகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தற்கொலைக்கு முயன்ற மனோஜ் சர்மாவை தடுத்தனர். தகவலறிந்த போலீசார் இறந்த நிலையில் கிடந்த தாய், மகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ‘அல்வா’-வில் விஷம் கலந்து கொடுத்து மனைவி, மகனை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மகள் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Manoj Sharma ,Pratap Nagar, Jaipur district, Rajasthan ,
× RELATED பாஜவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்: சச்சின் பைலட் கருத்து