×

கேரளாவில் வீடு கட்டித்தருவதாக 104 பேரை ஏமாற்றி பேஸ்புக்கில் விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் மோசடி: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் தினதேவன் (46). வெஞ்ஞாரமூடு பகுதியில் 2 கட்டிட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் பெயரில் பேஸ்புக் கணக்கும் வைத்துள்ளார். அதில் குறைந்த செலவில் வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்தார். இதற்கு பதிவு கட்டணமாக ₹14 ஆயிரம் வசூலித்துள்ளார். வீடு கட்ட முன்பதிவு செய்பவர்களின் தொலைபேசி எண்களை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் குரூப்பையும் உருவாக்கி உள்ளார். அதில் ஒவ்வொருவரின் வீட்டுக்கான வரைபடத்தை வெளியிடுவார். பின்னர் அவர்களது இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீடு கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறி நம்ப வைத்துள்ளார். பிறகு ஒவ்வொருவரிடமும் இருந்து தலா ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை முன்பணமாக வாங்கியுள்ளார்.

அதன் பிறகு வீடு கட்டும் பணிகளை தொடங்காமல் முன்பணம் கொடுத்தவர்களிடம் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். திருவனந்தபுரம் வலியதுறை பகுதியை சேர்ந்த மிருதுளா மோகன், ₹15 லட்சம் முன்பணமாக கொடுத்து பதிவு செய்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது இடத்தை பார்வையிட்ட தினதேவன், அங்கிருந்த மா, பலா மரங்களை வெட்ட வேண்டும் என்று கூறி, ஆட்களை வைத்து வெட்டி எடுத்து சென்றுள்ளார். அதற்கான பணத்தை உடனே தருவதாகவும் தினதேவன் கூறியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் மரங்களுக்கான பணத்தையோ, வீடு கட்டுவதற்கான பணிகளையோ அவர் தொடங்கவில்லை.  இது குறித்து வலியதுறை போலீசில் மிருதுளா மோகன் புகார் செய்தார். விசாரணையில் தினதேவன் ஒரு மோசடி ஆசாமி என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்தனர். விசாரணையில் 104 பேரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த பணத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கேரளாவில் வீடு கட்டித்தருவதாக 104 பேரை ஏமாற்றி பேஸ்புக்கில் விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் மோசடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Facebook ,Thiruvananthapuram ,Dinadevan ,Bothankodu ,Venjaramoodu ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...