×

வரத்து அதிகரிப்பு..விலை குறைவு!: சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் தக்காளி மண்டிகளுக்கு வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் தக்காளி விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. விலை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட தக்காளியை ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி சந்தைகள், உழவர் சந்தை மற்றும் காய்கறி மண்டிகளுக்கு விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டுவந்தனர். இதேபோன்று வெளி மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்ததால் கடும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட 28 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, தற்போது 530 ரூபாய் வரை விற்பனையாகியது. சில்லறை விலையில் கிலோவுக்கு 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியை போல் வெண்டை, கத்திரி, முள்ளங்கி, பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலையும் சென்ற வாரத்தை விட கிலோவுக்கு 5 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

The post வரத்து அதிகரிப்பு..விலை குறைவு!: சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Aathur, Salem district ,Salem ,Salem district ,Aadur ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...