×

அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட்: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தனர்.

அதில் பிரபல பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது 2016-ல் பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக வழக்கு தொடர்ந்தார். போத்ரா மறைவிற்கு பிறகு போத்ராவின் மகன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு இயக்குனர் ஆர்.கே. செல்வமணி அவரின் சார்பில் வழக்கறிஞரும் ஆஜராகாததால் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கை செப்.22-ம் தேதிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட்: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : RK Selvamani ,Chennai Georgetown ,CHENNAI ,R.K. Selvamani ,George Town ,Dinakaran ,
× RELATED சம்பாதிப்பதற்காகவா அரசியலுக்கு வந்தேன்?… அமைச்சர் ரோஜா கேள்வி