×

இந்தியாவின் பணக்கார கட்சியாக நீடிக்கிறது பாஜக: பணக்கார எம்.எல்.ஏ. பட்டியலில் டி.கே.சிவக்குமார் டாப்

டெல்லி: ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பணக்கார கட்சி என்ற தகுதியை பாரதிய ஜனதா கட்சி 6-வது ஆண்டாக தக்க வைத்து கொண்டுள்ளது. அந்த கட்சியின் வங்கி கணக்கில் ரூ.3,596 கோடி உள்ளது. ஆனால், 70 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சி வெறும் ரூ.162 கோடி மட்டுமே வைத்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வங்கி இருப்புத்தொகை வைத்துள்ளன என்ற விவரத்தை ஜனநாயக சீர்த்திருத்தங்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பாஜகவுக்கு ரூ.3,596 கோடி கட்சிப்பணமாக உள்ளது.

ஆனால், இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் வெறும் ரூ.162 கோடி மட்டுமே உள்ளது. 2020-ம் ஆண்டு இந்த தொகை ரூ.178 கோடியாக இருந்தது. கொரோனா காலத்தில் பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் என்ற பெயரில் நிதியை திரட்டி அதை கட்சி நிதியில் பாஜக சேர்த்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அத்துடன் 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பாத்திரங்கள் மூலம் பெருந்தொகையை பாஜக நன்கொடையாக பெற்றது என்பதும் புகார் ஆகும்.

யார் யார் எவ்வளவு ரூபாய் தேர்தல் நன்கொடை கொடுத்தனர் என்பதை மற்றவர்கள் அறியாதபடி சட்டத்தின் உதவியோடு மறைத்து ஊழலையே பாஜக சட்டமாக்கியது என்றும் எதிர்க்கட்சிகள் புகார் கூறுகின்றனர். இதனிடையே பணக்கார எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முதலிடம் பிடித்துள்ளார். இவரிடம் ரூ.1,413 கோடி சொத்து உள்ளது. 2-வது இடத்தை பிடித்த கர்நாடகத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ. புட்டசுவாமி கவுடா ரூ.1,267 கோடி வைத்துள்ளார்.

The post இந்தியாவின் பணக்கார கட்சியாக நீடிக்கிறது பாஜக: பணக்கார எம்.எல்.ஏ. பட்டியலில் டி.கே.சிவக்குமார் டாப் appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,MLA ,DK Sivakumar ,Delhi ,Bharatiya Janata Party ,DK Shivakumar ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...