×

திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவை ஒட்டி முதலமைச்சருக்கு உதயநிதி வாழ்த்து

சென்னை: திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவை ஒட்டி முதலமைச்சருக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாம் நம் தி.மு.கழகத்தின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் நம்மையெல்லாம் வழிநடத்தவுள்ளார்கள்.

அரை நூற்றாண்டு காலம் இயக்கத்தை கட்டிக்காத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழி நின்று கழகத்தின் கொள்கையாலும், ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்களாலும் இந்திய ஒன்றியத்திற்கே நம் கழகத்தலைவர் அவர்கள் வழிகாட்டி வருகிறார்

2019 நாடாளுமன்றத் தேர்தல் – 2021 சட்டமன்றத் தேர்தல் – உள்ளாட்சித் தேர்தல் என களம் கண்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்த அயராது உழைப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவை ஒட்டி முதலமைச்சருக்கு உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,President ,Djagam ,Chennai ,Udhayanidhi ,Dizhagam ,Tamil Nadu ,Single Trust ,Minister ,Dinakaran ,
× RELATED காமராஜர் பிறந்தநாள் திருவாரூர்...