×

அய்யப்ப சேவா சங்க கூட்டம்

 

மேலூர், ஆக. 28: மேலூரில் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம், மேலூர் கோட்டை கிணறு தெருவில் நேற்று நடைபெற்றது. மேலூர் கிளை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மேலூர் அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் செயலாளர் விஸ்வநாதன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

சிறப்பு விருந்தினராக மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், கவுன்சிலர் கமாலுதீன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சபரிமலை சேவைகள், சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து கோயில் முன்பு அன்னதானம் நடைபெற்றது. இதில், மேலூர் துணை செயலாளர் அழகுராஜா, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். ஞானகுமார் நன்றி கூறினார்.

The post அய்யப்ப சேவா சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ayyapa ,Seva ,Sangh ,Mallur, Ka ,Madurai District General Council ,All Bharata Ayyapa Seva Society ,Malore, Malore ,Ayyappa Seva ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை