×

திமுக இலக்கிய அணி கருத்தரங்கம்

 

மானாமதுரை, ஆக.28: திமுக மாவட்ட இலக்கிய அணி, மானாமதுரை நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். முன்னாள் அமைச்சர் தென்னவன், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி முன்னிலை வகித்தனர். மானாமதுரை நகர செயலாளர் பொன்னுச்சாமி வரவேற்றார்.

இலக்கிய அணி சார்பில் நடந்த கருத்தரங்கில் கலைஞர் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்த நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது. விழாவில் நலிந்தோருக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் மானாமதுரை ஒன்றியக்குழு தலைவர் லதா அண்ணாத்துரை, துணைத்தலைவர் முத்துச்சாமி, நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post திமுக இலக்கிய அணி கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : DMK Literary Team Seminar ,Manamadurai ,DMK District Literary Team ,City DMK ,Dinakaran ,
× RELATED மானாமதுரை வங்கியில் கொள்ளை முயற்சி:...