×

சில்லி பாயிண்ட்

* ஆசிய கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ஹஷ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), இப்ராகிம் ஸத்ரன், ரியாஸ் ஹஸன், ரகமத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ் (கீப்பர்), நஜிபுல்லா ஸத்ரன், ரஷித் கான், இக்ரம் அலிகில், கரிம் ஜனத், குல்பாதின் நயிப், முகமது நபி, முஜீப் உர் ரகுமான், பஸல்லாக் பரூக்கி, ஷராபுதீன் அஷ்ரப், நூர் அகமது, அப்துல் ரகுமான், முகமது சலீம்.

* யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. முன்னாள் சாம்பியன் பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

* இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி 4 டி20, 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி ஆக.30ல் செஸ்டர் லி ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெறும். இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக கிறிஸ் ஜார்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

* உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோற்றது ஏமாற்றம் அளித்தாலும், வெண்கலப் பதக்கம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி, திருப்தி அளிப்பதாக இந்திய நட்சத்திரம் எச்.எஸ்.பிரணாய் கூறியுள்ளார்.

 

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Asia Cup ,Hashmadullah Shahidi ,Ibrahim Sadran ,Riyaz Hasan ,Rahmat ,Dinakaran ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி