×

2021-23 வரையிலான காலகட்டத்தில் தேசிய சராசரியை விஞ்சிய தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ‘‘தமிழ்நாட்டின் வளர்ச்சி, கடந்த 2021-23 வரையிலான ஆண்டுகளில் தேசிய சராசரியை விஞ்சியுள்ளது’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: பெரும் பெருமிதத்துடன் தேசிய சராசரியை விஞ்சிய வளர்ச்சி. நமது திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது.

நமது அயராத முயற்சிகள் 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் 8 சதவீதம் எனும் சிறப்பான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உறுதிசெய்து, இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றல்மிகு மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளன. அதேபோல, நடப்பு விலையில் 2022-23 ஆண்டுக்கான நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (ஜிடிபிஎஸ்) ரூ.14,53,321 கோடி உயர்ந்து, 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்னும் நமது இலக்கை நோக்கிய பயணத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post 2021-23 வரையிலான காலகட்டத்தில் தேசிய சராசரியை விஞ்சிய தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,CM ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்