×

திருப்பதியில் வருடாந்திர பவித்ர உற்சவம் துவக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்திர உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை பவித்ர மாலைகள் சமர்ப்பணம் நடைபெற்றது.முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சம்பங்கி மண்டபத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் இரண்டாம் நாளான இன்று யாக சாலையில் வைக்கப்பட்ட பவித்திர மாலைகள் அனைத்தும் உற்சவருக்கும், மூலவருக்கும், கோயிலில் உள்ள இதர சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து, நாளை யாகசாலை பூஜையுடன் பூர்ணாஹூதியுடன் பவித்திர உற்சவம் நிறைவு பெறுகிறது.இதனையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பவித்ர உற்சவம் நடத்துவதன் முக்கிய நோக்கம் தினந்தோறும் நடைபெறக்கூடிய நித்திய பூஜைகளில் தெரிந்தோ தெரியாமலோ அர்ச்சகர்களால், பணியாளர்களால் மற்றும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தி செய்யும் விதமாக இந்த பவித்ர உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.பதிேனாறாம் நூற்றாண்டு வரை இந்த பவித்ர உற்சவம் நடத்தப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் கைவிடப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் தவறாமல் பவித்திர உற்சவத்தை ஏழுமலையான் கோயிலில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதியில் வருடாந்திர பவித்ர உற்சவம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Bavitra Utsavam ,Tirupati ,Tirumala ,Pavithra Utsavam ,Tirupati Eyumalayan Temple ,Annual Pavitra Utsavam ,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...