×

தென்கரைப் பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

 

பெரியகுளம், ஆக. 27: பெரியகுளம் தென்கரைப் பேரூராட்சி பகுதிகளில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். பெரியகுளம் அருகே உள்ள தென்கரைப் பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்ட விரிவாக்க பணிகள் (அம்ருத்) மற்றும் பேரூராட்சி அலுவலக பகுதிகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் நாகராஜ், துணைத் தலைவர் ராதா ராஜேஷ், செயல் அலுவலர் மோகன் குமார், வார்டு உறுப்பினர்கள் தேவராஜ், லட்சுமணன், கோமதி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துறை இயக்குனர், அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post தென்கரைப் பேரூராட்சியில் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : South Coast Municipality ,Periyakulam ,Collector ,Shajivana ,Periyakulam Tenkarai Municipality ,Tenkarai Municipality ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...